அரச பணியாளர்களுக்கு வைக்கப்பட்ட மிகப்பெரிய ஆப்பு!


 இலங்கையில் அரச ஊழியர்கள் அலுவலக கடமை நேரத்தில் எவ்வாறு இருக்கவேண்டும் என்பது தொடர்பில் ஏற்கனவே இருக்கின்ற விதிமுறையொன்று கடுமையாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


இதன்படி அலுவலக நேரத்தில் முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் உலாவரும் அரச ஊழியர்களை உடனடியாக பணியிலிருந்து நீக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவினை பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் திணைக்களத் தலைவர்களுக்கு விடுத்துள்ளார்.

கடமை நேரத்தில் சில அரச ஊழியர்கள் பேஸ்புக் பார்ப்பதால் பொதுமக்களுக்கு தடையின்றி மேற்கொள்ளவேண்டிய பணிகள் கிடப்பில் போடப்படுவதாக அரசாங்கத்துக்கு பலமுனைகளிலிருந்தும் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.

இதனால் பல பொதுமக்களும் தமக்குரிய சேவைகளைப் பெறுவதில் பல்வேறு சிரமங்களை எதிர் நோக்கிவருகின்றனர். இதனைக் கருத்திற்கொண்டே இந்த நடைமுறை இறுக்கமாக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.