இலங்கை வருகின்றார் இந்திய வெளிவிவகார அமைச்சர்!


உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நாளை (செவ்வாய்க்கிழமை) இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.

அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் அழைப்பின் பேரில் விஜயம் மேற்கொள்ளும் அவர் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை இலங்கையில் இருந்து அரச தலைவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவர் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை 2021 ஆம் ஆண்டு இலங்கைக்கு வரும் முதலாவது வெளிநாட்டு இராஜதந்திரி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இரு நாடுகளிலும் கொவிட் -19 பயண கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் இந்திய வெளிவிவகார அமைச்சரின் இந்த பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.