யாழ் பல்கலை மாணவர்கள் உணவு தவிர்ப்புப் போராட்டம்!!

 


யாழ்.பல்கலைக்கழகத்தில் வகுப்புத் தடை விதிக்கப்பட்ட மாணவர்கள், உணவு தவிர்ப்புப் போராட்டமொன்றை இன்று முன்னெடுத்துள்ளனர்.


இந்த உணவு தவிர்ப்புப் போராட்டம், யாழ்.பல்கலைக்கழக பரமேஸ்வரர் ஆலய நுழைவாயிலில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.


போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், தங்களுக்கு விதிக்கப்பட்ட வகுப்புத் தடையை நீக்குமாறு வலியுறுத்தினர்.


இதன்போது சம்பவ இடத்திற்கு வருகைதந்த கோப்பாய் பொலிஸார் போராட்டத்தை கைவிடுமாறும், இந்த விடயத்தை உயர் அதிகரிகளின் கவனத்திற்கு தெரியப்படுத்துவதாகவும் மாணவர்களிடம் கேட்டுக்கொண்டனர்.


எனினும் பொலிஸாரின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளாத மாணவர்கள், தொடர்ந்து தமது போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colomboகருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.