தப்பித்துக்கொள்ள மாடியிலிருந்து குதித்த மாணவன்!


 கொழும்பில் விபச்சார வலையமைப்புக்கள் இணையவழியில் வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்க ஆரம்பித்துள்ளதாக அண்மையில் பொலிசார் அறிவித்திருந்தனர். கொரொனா பெருந்தொற்று காலத்தில் இணையவழி கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், மாணவர்களும் இந்த வலையமைப்பிற்குள் விழும் அபாயமும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்கு உதாரணமாக, கொழும்பின் பிரபல பாடசாலையின் மாணவன் ஒருவன் விபச்சார விடுதியிலிருந்து கைது செய்ய்பட்ட சம்பவம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கொழும்பிலுள்ள பிரபல பாடசாலையொன்றின் மாணவனே பொலிசாரிடம் சிக்கினார்.

கொரோனா பெருந்தொற்றினால் முடக்க நிலை அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து இணைய வழி கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. அன்றாட உழைப்பாளியொருவரின் மகனான குறிப்பிட்ட மாணவன், இந்த வருடம் க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றவிருந்தார்.

மகனின் கல்விக்காக தந்தையார் கடன்பெற்று ஒரு ஸ்மார்ட்போன் வாங்கிக் கொடுத்திருந்தார். இதன்மூலம் இணையவழி கல்வியை ஆரம்பித்த மாணவன், சில நண்பர்களின் மூலம் ஆபாச இணையத்தளம் ஒன்றிற்குள் நுழைந்தான். அதில் இலங்கையின் விபச்சார அழகிகள் தமது தொலைபேசி இலக்கங்களை பதிவிட்டு, வாடிக்கையாளர்களை ஈர்த்து வந்தனர்.

தமது வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டிய பணத்தையும் அதில் குறிப்பிட்டிருந்தனர்.

அந்த இலக்கங்களிற்கு அழைப்பேற்படுத்திய மாணவன், அவர்களுடன் ஆரம்பத்தில் பேசியுள்ளான்.

அவர்களுடன் பேசியது, நண்பர்களுடனான பரிமாற்றங்களின் போது, தனது நண்பர்கள் 7,8 பேர் அந்த விபச்சார அழகிகளுடன் தொடர்புபட்டிருந்ததை அறிந்தான்.

இதையடுத்து, விபச்சார அழகியொருவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அவரை சந்திக்க விரும்பவதாக தெரிவித்தான். தன்னை எப்பொழுதும் சந்திக்கலாம், பம்பலப்பிட்டியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கிறேன் என யுவதி தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, யுவதியை சந்திக்கும், நாள் மற்றும் நேரத்தை மாணவன் முன்பதிவு செய்துள்ளார்.

ஒரு மணித்தியாலத்திற்கு 5,000 ரூபாய், ஒரு நாளுக்கு 20,000 ரூபாய் என யுவதி தனது கட்டணத்தை தெரிவித்துள்ளார்.

மாணவன் தனது குடும்ப நிலையை மறந்து, அந்த விபச்சார யுவதியுடன் நேரத்தை செலவிட வேண்டுமென்பதிலேயே குறியாக இருந்தார்.

தனது தந்தை மிகச்சிரமப்பட்டு உழைத்து வந்து தாயாரிடம் கொடுத்து வைத்திரு்த பணத்தில், 5,000 ரூபாயை திருடிக் கொண்டு மறுநாள் காலை பம்பலப்பிட்டி புகையிரத நிலையத்திற்கு அண்மையாக வந்து, வலைத்தளத்தில் குறிக்கப்பட்டிருந்த யுவதியின் இலக்கத்திற்கு தொலைபேசி அழைப்பேற்படுத்தினார்.

யுவதி தெரிவித்த அடையாளத்தின்படி பம்பப்பிட்டியில் இரண்டு மாடி குடியிருப்பின் மேல்மாடியில் உள்ள வீட்டிற்கு சென்றார். அங்கு இரண்டு யுவதிகள் தங்கியிருந்தனர்.

இரண்டு யுவதிகளுடனும் அன்று மாலை வரை அந்த வீட்டிலேயே மாணவன் தங்கியிருந்தான்.

மாலையில் வீடு திரும்ப தயாரான போது, மீண்டும் அவன் அங்கு வர வேண்டுமென யுவதிகள் மாணவனை கட்டியணைத்து முத்தமிட்டனர்.

புறப்படுவதற்கு முன்பாக அவர்கள் பணம் கேட்டபோது, தாயிடமிருந்து திருடிய 5,000 ரூபா பணத்தை அவர்களிடம் கொடுத்தான். எனினும், அழகிகள் இருவரும் கோபமடைந்து கூச்சலிட ஆரம்பித்துள்ளனர்.

ஒரு மணத்தியாலத்திற்கான கட்டணமே 5,000 ரூபா. ஒரு நாளைக்கான கட்டணம் 20,000 ரூபாயை இப்பொழுது நீ செலுத்த வேண்டும் என மிரட்டினர். அவர்கள் கூச்சலிட்டதில் மாணவன் அச்சமடைந்தான். தன்னை விட்டுவிடும்படி கெஞ்சினான்.

“ஒரு மணி நேரத்திற்கு 5,000 என்று சொன்னேன். ஒரு நாளைக்கு இருபதாயிரம். நீ பணம் செலுத்தவில்லை என்றால், பொலிஸ் உன்னை கைது செய்யும். எங்களுக்கு பொலிஸ் நண்பர்கள் உள்ளனர்” என இரண்டு பெண்களும், மாணவனின் சேர்ட்டை பிடித்துக்கொண்டு மிரட்டத் தொடங்கினர்.

இந்த இரண்டு பெண்களிடமிருந்தும் எப்படியாவது தப்பிக்க வேண்டும் என்று மாணவன் நினைத்தான். பொலிசாரிடம் சிக்கினால் குடும்பத்திற்கு எவ்வளவு அவமானமாகும் என நினைத்து அச்சமடைந்தார்.

இரண்டு பெண்களின் பிடியிலிருந்து தப்பிக்க, இரண்டாவது மாடியிலிருந்து கீழே குதித்து, தப்பிக்க திட்டமிட்டுள்ளார். ஆனால் அதில் தவறு நேர்ந்து விட்டது. கீழே குதித்த போது, தவறுதலாக விழுந்து பலத்த காயமடைந்தார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு, அயலர்கள் அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். பல நாட்களாக வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மாதணவன், தற்போது ஓரளவு குணமடைந்துள்ளார்.

இதற்கிடையில், பொலிசார் விசாரணைகளைத் தொடங்கினர். மாணவனிடமிருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் இரண்டு விபச்சார அழகிகளை பொலிசார் கைது செய்தனர். அவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில், கடுமையான சமூக நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

மாணவன் இன்னும் படுக்கையில் இருக்கிறார்.

பொலிஸ் விசாரணையில், இந்த வலைத்தளங்களில், ஒரு இளம் ஜோடி உடலுறவு கொள்வதை வாடிக்கையாளர்கள் வட்ஸ்அப் வீடியோ வழியாக பணம் செலுத்தி பார்க்கும் வசதியும் என்னது. அவர்களைச் சந்திப்பதற்கும் அவர்களின் சேவைகளை வழங்குவதற்கும் கட்டணம் வசூலிக்கப்படுவதும் தெரிய வந்தது.

விசாரணையைத் தொடங்கிய மேலடமாகாண புலனாய்வு பிரிவினர் கடந்த சில நாட்களில் 21 பெண்களை கைது செய்தார். கைது செய்யப்பட்ட பெண்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர், அவர்களில் பெரும்பாலோர் கடுமையான சமூக நோய்களால் பாதிக்கப்பட்ட பெடிருந்தார்.

கைது செய்யப்பட்ட பெண்களில் பெரும்பாலோர் கொழும்பிலிருந்து வெகு தொலைவில் உள்ள அனுராதபுரம், பொலன்னருவ மற்றும் மொனராகல போன்ற தொலைதூர பகுதிகளைச் சேர்ந்தவர்கள். பல பெண்கள் வேலை இழந்ததால் இந்தத் தொழிலில் ஈடுபட்டனர்.

கைது செய்யப்பட்ட பெண்களில் ஒருவர் மவுண்ட் லவ்னியா பகுதியில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் தங்கியிருந்ததாகவும், ஹோட்டல் அறைக்கு மாதம் ரூ .60,000 செலுத்தி வருவதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இணைய அடிப்படையிலான விபச்சார மாஃபியாவினால், பாடசாலை மாணவர்கள் வேகமாக அடிமையாகி வருகின்றனர். இது குறித்து பெற்றோர் அவதானமாக இருக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.