கோட்டாபயவுக்கு அவதூறு! பேஸ்புக் பதிவிட்டவர் கைது!


 ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக பேஸ்புக் வழியாக அவதூறான கருத்துக்களைப் பதிவிட்ட முஸ்லிம் நபர் ஒருவர் கொழும்பு – தெஹிவளையில் வைத்து நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டிருக்கின்றார்.

தெஹிவளை – பீற்றர் வீதியைச் சேர்ந்த இலக்கம் 46க் கீழ் 4 என்கிற முகவரியில் இருந்த மொஹமட் சபால் நவ்ஸாட் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டிருக்கின்றார்.

நேற்று பகல் குற்றப் புலனாய்வுப்பிரிவினரால் சந்தேக நபர் கொழும்பு பிரதான நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது அவரை எதிர்வரும் 14 நாட்களு்ககு விளக்கமறியலில் வைக்கும்படியான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.