கையை தூண்டித்து வீசியெறிந்த கும்பல் கைது!


 மிடியாகொட பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் கொலைசெய்யப்பட்ட சம்பவர் தொடர்பில் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் நால்வரும் நேற்றைய தினம் மிடியாகொட பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ள நிலையிலேயே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் வைத்திருந்த இரு மோட்டார் சைக்கிள்களும், பல ஆயுதங்களும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்டவர்கள் 24 முதல் 32 வயதுக்குட்பட்டவர்கள் எனத் தெரிவித்த பொலிஸார் அவர்களை இன்றைய தினம் பலபிட்டிய நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.