சிறுமிகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய உறவினர்களை தேடி வலை வீச்சு!


 15 வயதான இரண்டு சிறுமிகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய கும்பல் சிக்கியுள்ளது. அந்த சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்த 20 தொடக்கம் 60 வயதானவர்களை பொலிசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

மாத்தறை பிரதேச குழந்தைகள் மற்றும் மகளிர் பணியகத்திற்கு 27 ஆம் திகதி காலையில் கிடைத்த அநாமதேய தொலைபேசி அழைப்பில், 14 மற்றும் 12 வயதுடைய இரண்டு சிறுமிகள் காலையில் முச்சக்கர வண்டியில் அழைத்துச் செல்லப்பட்டு, மீண்டும் இரவில் கொண்டு வந்து இறக்கிவிடுவதாகக் குறிப்பிடப்பட்டது. இரண்டு சிறுமிகளும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதாக அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து விரைந்து செயற்பட்ட பொலிசார், குறிப்பிட்ட முச்சக்கர வண்டி சாரதியை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து விசாரணை நடத்தினர். இதன் போது பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.

அவர்கள் அளித்த தகவல்களின் அடிப்படையில், இரண்டு சிறுமிகளையும் பொலிசர் அடையாளம் கண்டனர். ஒரு சிறுமிக்கு 15 வயது 9 மாதமும், மற்ற சிறுமிக்கு 15 வயது 5 மாதமும் வயது என்பது தெரியவந்தது.

பெற்றோர்கள் பிரிந்தமை, தாய்மார்கள் மறுமணம் செய்தமையால் சிறுமிகள் கைவிட்டப்பட்டுள்ளனர்.

15 வயது 9 மாதமான சிறுமி முதலில் தனது காதலனால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு, வயதான ஒருவரின் பிடிக்கு சென்றுள்ளார். மற்றைய சிறுமியும் அந்த குழுவிடம் சிக்கியுள்ளார்.

அவர்கள் புரியாத வயதிலேயே பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

அந்த பகுதியிலுள்ள இரண்டு பெண்கள் அந்த சிறுமிகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி பணம் சம்பாதிக்க ஆரம்பித்துள்ளனர்.

28 ஆம் திகதி இரவு முதல் 29 ஆம் திகதி காலை வரை விசாரணை நடத்தியதுடன், சிறுமிகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய ஒரு பெண், முச்சக்கர வண்டி சாரதி மற்றும் ஹோட்டல் மேலாளரை கைது செய்தனர். மேலும் சில சந்தேகநபர்கள் தலைமறைவாகி விட்டனர்.

சிறுமிகள் மருத்துவ பரிசோதனைக்குட்படுத்தப்பட்டதில் ஒரு சிநுமி கர்ப்பம் தரித்திருந்தது தெரிய வந்தது.

3ஆம் திகதி நடத்தப்பட்ட நடவடிக்கையில் சிறுமிகளை உடலுறவிற்கு தூண்டிய மாமா என அழைக்கப்பட்ட நபரையும், ஹொட்டல் துறை சார்ந்த இருவரையும் கைது செய்தனர். பிரதான பெண் சந்தேகபர் தலைமறைவாகி விட்டார்.

சிறுமிகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய பிரதான பெண் சந்தேகநபர் தவிர, அந்த சிறுமிகளுடன் பணத்திற்கு உல்லாசம் அனுபவிக்க வந்தவர்களையும் பொலிசார் வலைவீசி தேடி வருகிறார்கள். சந்தேக நபர்கள் 20 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள். ஹமுகேவத்த, பொல்ஹேன, மாத்தறை நுபே, வல்கம, வெவாஹமண்டுவ மற்றும் திககொட பகுதிகளில் வசிப்பவர்கள் என்றும் பொலிசார் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.