முக்கிய இந்திய வீரர்கள் ஐவர் தனிமைப்படுத்தல்!
புத்தாண்டு தினத்தன்று மெல்பேனில் ஹோட்டல் ஒன்றுக்குள் கொரோனா விதிமுறைகளை மீறி உணவருந்தியதாக இந்திய அணியின் முக்கிய ஐந்து வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
டுவிட்டர் காணொளி ஒன்றினால் இந்த விடயம் கண்டறியப்பட்ட நிலையில் விசாரணை நிறைவடையும் வரை இவர்கள் தனிமையில் இருக்க வேண்டும் என்று பணிக்கப்பட்டுள்ளது.
ரோஹித் சர்மா, சுப்மன் கில், ப்ரிதிவ் ஷவ், ரிஷப பாண்ட், நவ்தீப் சைனி ஆகியோரே இவ்வாறு சிக்கலில் சிக்கியுள்ளனர்.
இந்தியாவை சேர்ந்த இந்திய ரசிகர் ஒருவர் ஒரே ஹோட்டலில் தான் இந்திய வீரர்களை கண்டதாக தெரிவித்து, ‘நான் வீரர்களது உணவுக்கான தொகையை அவர்களுக்கு தெரியாமல் செலுத்தினேன். என்னுடைய சூப்பர் ஸ்டார்களுக்கான சிறிய பங்களிப்பு. நான் தான் பணம் செலுத்தினேன் எனத் தெரிந்தவுடன், அண்ணா காசு வாங்குங்கள் என என்னிடம் ரோஹித் சர்மா சொன்னார். என்னை அணைத்து நன்றி சொன்னார் ரிஷப் பாண்ட்’ என்று டுவிட் செய்தார். இதுவே தனிமைப்படுத்தல் வரை செல்ல காரணமாகிய நிலையில், குறித்த ரசிகர் டுவிட்டை மீளப்பெற்று, பாண்ட் தன்னை கட்டியணைக்கவில்லை என்றும், முன்னைய பதிவை ஆர்வமிகுதியால் எழுதியதாக குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை