மதுப் பிரியர்கள் சனசமூக நிலையத்தில் அட்டகாசம்!!

 


தென்மராட்சி பகுதியில் மதுப் பிரியர்களின் அட்டகாசம் அதிகரித்து வருவதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். தென்மராட்சி மருதடி சனசமூக நிலையத்தில் இரவு நேரத்தில் மதுபிரியர்கள் நாளாந்தம் அட்டகாசம் அதிகரித்துள்ளதாகவும், சனசமூக நிலையத்தில் அதிகாலை பியர் வெற்று போத்தல்கள்


மற்றும் மது போத்தல்கள் காணப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். சிறிது காலம் முன்னர் சனசமூக நிலையத்திற்கு பின்னால் சிலர் மது அருந்தியதாகவும், ஆனால் தற்போது சனசமூகத்திற்குள்ளேயே மதுப் பிரியர்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக உரியவர்கள் கவனமெடுக்குமாறும் அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.