புதிய ஆண்டில் பாடசாலைகள் ஆரம்பிக்கும் திகதி அறிவிப்பு!!

 


தமிழ், சிங்கள, முஸ்லிம்  பாடசாலைகளுக்கான நாட்காட்டி கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது. இது 31.12.2020 கடிதத்திற்கு  அமைவாக  சகல மாகாண செயலாளர்கள்,  மாகாண கல்வி பணிப்பாளர்கள், வலயக் கல்வி பணிப்பாளர்கள், கோட்ட கல்வி பணிப்பாளர்கள் என பலருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் முதலாம் தவணை பாடசாலைகள் க.பொ.த.சாதாரண தர பரீட்சைக்கு முன்னர், பின்னர் என.இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது.
தமிழ் சிங்கள பாடசாலைகள்
முதலாம் தவணை 
ஜனவரி 11 திங்கட்கிழமை  ஆரம்பிக்கப்பட்டு பெப்ரவரி 25ம் திகதி வியாழக்கிழமை வரை (இரு தினங்கள் உட்பட)
(2021.02.26 – 2021.03.14 வரை க.பொ.த.சாதாரண தர பரீட்சைக்காக விடுமுறை வழங்கப்பட்டு, இரண்டாம் கட்டமாக 2021.03.15 திங்கட்கிழமை  ஆரம்பிக்கப்பட்டு 2021.04.09ம் திகதி வெள்ளிக்கிழமை (இரு தினங்கள் உட்பட) நடைபெறும்.
இரண்டாம் தவணை 
2021 ஏப்ரல் 19ம் திகதி முதல் 2021 யூலை 30ம் திகதி வெள்ளிக்கிழமை வரை (இரு தினங்கள் உட்பட) நடைபெறும்.
மூன்றாம் தவணை 
2021.ஓகஸ்ட் மாதம் 30ம் திகதி திங்கட்கிழமை  முதல் 2021 டிசம்பர் மாதம் 3 ம் திகதி வெள்ளிக்கிழமை வரை (இரு தினங்கள் உட்பட) நடைபெறவுள்ளது.
முஸ்லிம் பாடசாலைகள்
முதலாம் தவணை 
ஜனவரி 11 திங்கட்கிழமை  ஆரம்பிக்கப்பட்டு பெப்ரவரி 25ம் திகதி வியாழக்கிழமை வரை (இரு தினங்கள் உட்பட)
(2021.02.26 – 2021.03.14 வரை க.பொ.த.சாதாரண தர பரீட்சைக்காக விடுமுறை வழங்கப்பட்டு, இரண்டாம் கட்டமாக 2021.03.15 திங்கட்கிழமை  ஆரம்பிக்கப்பட்டு 2021.04.09ம் திகதி வெள்ளிக்கிழமை (இரு தினங்கள் உட்பட) நடைபெறும். (ரம்ழான் நோன்பிற்காக 2021.04.10 முதல் 2121.05.16 வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது)
இரண்டாம் தவணை 
2021 மே 17ம் திகதி முதல் 2021 ஓகஸ்ட்  25ம் திகதி புதன்கிழமை  வரை (இரு தினங்கள் உட்பட) நடைபெறும். (ஓகஸ்ட் 26, 27ம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளது)
மூன்றாம் தவணை 
2021.ஓகஸ்ட் மாதம் 30ம் திகதி திங்கட்கிழமை  முதல் 2021 டிசம்பர் மாதம் 3 ம் திகதி வெள்ளிக்கிழமை வரை (இரு தினங்கள் உட்பட) நடைபெறவுள்ளது. எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.