சாக்லேற் கனவுகள் 11- கோபிகை!!
எங்கு தேடியும்
கனிகா கிடைக்கவில்லை,
அலைபேசி நிறுத்தம்
செய்யப்பட்டிருந்தது.
அளவில்லா கோபத்தில்
கனன்ற முகத்தை
இயல்பாக்க முயற்சித்தான்
ஆதித்யன்.
'அவளுக்கென்ன பிரச்சினையோ,
விடுடா....வா...போகலாம்,'
அனுதி அழைத்த போதும்
அவன் மனம்
அமைதியடையவில்லை.
மனமுட்கள் கூரானது,
இதய ஓரங்களில்
அவமானத்தின் புலம்பல்,
மௌனமாய் நடந்தான்.
கூட நடந்தபடி
மைத்துனனின்
கரம் பற்றினாள்,
'ஆதி, ஒரு நிமிச
கோபந்தான்
அறுபது நிமிச
சந்தோசத்தை
அழிச்சிடுது,
உனக்கு நான்
சொல்லவேண்டியதில்லை,
எங்களுக்கெல்லாம்
நீதான் சொல்லுவாய்....'
தலையை ஆட்டியபடி
அனுதியோடு
இணைந்து நடந்தவனிடம்
ஆச்சரிய முறுவல்.
வாளிக்குள் விட்ட
நண்டு போல
எப்போதும்
லொடலொடக்கும்
அனுதியா, அவனுக்கு
புத்திமதி சொல்வது?
'அனூ.....நீ.....நீ.....'
'பரவாயில்லை,
நீயும் தேறிட்டாய்...'
என்றவன்,
'அத்தைமாமாட்ட
சொல்லவேணும்,
சந்தோசப்படுவினம்'
என்றான்.
கனவுகள் தொடரும்
கோபிகை.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை