பசறை தேசிய பாடசாலையில் 6 மாணவர்களுக்கு கொரோனா!

 


பதுளை- பசறை தேசிய பாடசாலையில் 6 மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.


குறித்த பாடசாலையில் கல்வி பயிலும் 4 மாணவர்கள் மற்றும் 2 மாணவிகளுக்கே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இந்நிலையில் குறித்த மாணவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் அவர்கள் சென்று வந்த பகுதிகள் இனங்காணப்பட்டு அப்பகுதிகளிலும் பி.சி.ஆர்.பரிசோதனை  மேற்கொள்ள சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வதாகவும் கூறப்படுகின்றது.


இதேவேளை ஹம்பலந்தோட்டை- மாகோலனிய பகுதிக்கு பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


குறித்த பகுதியில் 34 பேர், கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டதை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.