சிம்புவின் அதிரடி டிரைலர் வெளியானது!!

 


சிம்பு நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் உருவான ’ஈஸ்வரன்’ திரைப்படத்தின் டிரைலர் இன்று மாலை 5.04 மணிக்கு வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் டிரைலர் வெளியானது


இதில் ஆரம்ப காட்சியே அசத்தலாக இருந்தது. அதில் ’ஜல்லிக்கட்டு காளை சும்மா சும்மா வர மாட்டான், ஆனால் முடிவு பண்ணி களத்தில் இறங்கிவிட்டான் என்றால் அன்னிக்கு தாண்டா உனக்கு, எனக்கு மொத்த ஊருக்கும் பொங்கல்’ என்ற வசனத்துடன் ட்ரைலர் ஆரம்பமாகிறது


அதற்கு அடுத்த காட்சியில் ’வருகிற பௌர்ணமி அன்று இந்த வீட்டில் ஒரு உயிர் போகப் போறது என்று குறிபார்க்கும் ஒருவர் கூற, அதற்கு வில்லனோ, ‘அவன் தப்பா சொல்லி இருக்கான், ஒரு உயிர் அல்ல அந்த வீட்டில் உள்ள மொத்த உசுரும் போகப் போகிறது’ என்ற வசனம் வருவதும் இதனை அடுத்து சிம்பு, ‘யாராக இருந்தாலும் சரி, அந்த வீட்டில் ஒரு உயிரை கூட போக விடமாட்டேன்’ என்று சவால் விடுவதும் சிம்பு ரசிகர்களுக்கு சரியான விருந்தாக இருக்கும்.


அதன் பிறகு மற்றொரு காட்சியில் ’எதிரி போடும் ஒவ்வொரு பாலிலும் அவனுடைய பலவீனத்தை நான் பார்த்து கொண்டிருக்கிறேன் என்று சிம்பு கூறுகிறார். டிரைலரின் முடிவில் கடைசி பஞ்சாக ’நீ அழிப்பதற்காக வந்த அசுரன் என்றால், நான் காப்பதற்காக வந்திருக்கும் ஈஸ்வரண்டா’ என்று சிம்பு ஆவேசமாக பேசும் காட்சி உள்ளது. இந்த காட்சி தனுஷின் அசுரன் படத்திற்கான உள்குத்தா? அல்லது படத்தின் கதையோடு சம்பந்தப்பட்டதா? என்பது படம் பார்க்கும்போதுதான் தெரியும்


மொத்தத்தில் இந்த டிரைலரில் உள்ள இரண்டு நிமிடங்களில் சிம்புவின் அதிரடி ஆக்ஷன் காட்சிகள், நிதி அகர்வாலுடன் ரொமான்ஸ் காட்சிகள், காமெடி காட்சிகள், செண்டிமெண்ட் காட்சிகள் என மொத்தம் அம்சங்களும் இருப்பதால் சிம்புவின் ஒரு ஜனரஞ்சகமான வெற்றி படமாக ’ஈஸ்வரன்’ இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை என தெரிகிறது. சிம்பு ரசிகர்களுக்கு மட்டுமன்றி குடும்ப ஆடியன்ஸ்களும் ரசிக்கும் வகையில் இந்த படம் இருக்கும் என்பதையே இந்த டிரைலரில் இருந்து காணமுடிகிறது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.