கில்லியாக மாறிய விஜய் - அசத்தும் புதிய மாஸ் டீசர்!!
தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படம் நாளை உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக இருக்கும் நிலையில் கடந்த சில நாட்களாக தினமும் ’மாஸ்டர்’ படத்தின் புரமோ வீடியோக்கள் தயாரிப்பு நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் வெளியாகி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
அந்த வகையில் சற்று முன்னர் வெளியான புதிய புரோமோ வீடியோவில் விஜய் மற்றும் வில்லன் கோஷ்டிகள் கபடி விளையாடும் மாஸ் காட்சிகள் உள்ளன, அதில் வில்லன் தரப்பினர் கபடி விளையாட கோடுகளை கிழித்து, ‘என்ன வாத்தி, இந்த விளையாட்டின் பெயர் என்ன தெரியுமா? இது கிரிக்கெட்டோ புட்பாலோ இல்லை, இங்கே ரூல்ஸ்ஸே வேற’ என்று கூறியவுடன் தளபதி விஜய் மாஸ் ஆக சட்டையை கழற்றி எறிந்துவிட்டு களத்திற்குள் கபடி விளையாட இறங்கும் மாஸ் காட்சிகள் உள்ளன
‘கில்லி’ திரைப்படத்தில் கபடி வீரராக விளையாடிய விஜய், அதன் பின்னர் தற்போது மாஸ் ஆக கபடி வீரராக களம் இறங்கி ஆக்சன் காட்சிகளில் அசத்துவது விஜய் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை