'மாஸ்டர்' படத்தை லீக் செய்தவரை இதனால்தான் கண்டுபிடிக்க முடிந்தது!!

 


தளபதி விஜய் நடித்து முடித்துள்ள மாஸ் திரைப்படமான ’மாஸ்டர்’ திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாக இருக்கும் நிலையில் நேற்று இரவு திடீரென ஒருசில இணையதளங்களிலும், சமூக வலைதளங்களிலும் இந்த படத்தின் ஒருசில காட்சிகள் லீக்கானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இதனை அடுத்து இது குறித்து படக்குழுவினர் தீவிரமாக விசாரணை செய்து கொண்டிருந்தனர் என்பதும் தனியார் டிஜிட்டல் நிறுவன ஊழியர் ஒருவர் தான் இந்த காட்சிகளை லீக் செய்தார் என கண்டுபிடிக்கப்பட்டது..


இதனையடுத்து அந்த ஊழியர் மீது காவல்துறையில் தயாரிப்பாளர் புகார் அளித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தனியார் டிஜிட்டல் நிறுவன ஊழியர் தான் இந்த காட்சிகளை லீக் செய்தது என்பதை கண்டுபிடிக்க ட்விட்டர் நிறுவனம் மிகப் பெரிய அளவில் உதவி செய்ததாகவும் அதன் காரணமாகவே லீக் செய்தது யார் என்பது எளிதில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.


மேலும் ’மாஸ்டர்’ லீக் காட்சிகள் மேலும் பரவாத வகையில் உடனடியாக சம்பந்தப்பட்ட லீக் காட்சிகள் இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டன என்றும், இதற்கு விஜய் ரசிகர்கள் உள்பட டிவிட்டர் பயனாளிகள் மிகுந்த ஒத்துழைப்பு அளித்ததாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். 

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.