லாஸ்லியாவின் பதிவு - இந்திய அளவில் டிரெண்ட்!

 


பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளர்களில் ஒருவரான லாஸ்லியா, அந்த சீசனில் டைட்டில் வின்னராக அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது. இருப்பினும் அவர் கடைசி நேரத்தில்தான் வெளியேற்றப்பட்டார் என்பது குறிப்பிடதக்கது.


பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு லாஸ்லியாவுக்கு தமிழ் திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தது என்பதும் அவர் தற்போது இரண்டு படங்களில் நடித்து வருகிறார் என்பதும் அந்த இரண்டு படங்களின் படப்பிடிப்புகளும் இறுதிகட்டத்தில் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.


இந்த நிலையில் சமீபத்தில் லாஸ்லியாவின் வாழ்க்கையில் துயரம் ஒன்று நடந்தது. அவருடைய தந்தை கனடாவில் திடீரென மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். இதன் காரணமாக அதிர்ச்சியில் இருந்த லாஸ்லியா இலங்கை சென்று தனது தந்தைக்கு செய்ய வேண்டிய இறுதி சடங்குகளை செய்து முடித்துள்ளார்.


தற்போது தந்தையின் மறைவு என்ற துயரத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வரும் லாஸ்லியா மீண்டும் சமூக வலைதளத்திற்கு நீண்ட இடைவெளிக்குப்பின் வந்துள்ளார். நேற்று லாஸ்லியா தனது சமூக வலைத்தள பக்கத்தில் கருப்பு வெள்ளையில் பதிவு செய்துள்ள ஒரே ஒரு புகைப்படம் ஆயிரம் அர்த்தங்களை கூறுவதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


மேலும் துயரங்களிலிருந்து லாஸ்லியா மீண்டு வந்து, மீண்டும் ஒரு உற்சாகமாக பெண்ணாக வலம் வர வாழ்த்துக்கள் என நெட்டிசன்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். லாஸ்லியா பதிவு செய்த இந்த ஒரே ஒரு இன்ஸ்டாகிராம் பதிவு இந்திய அளவில் நேற்று சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


Blogger இயக்குவது.