அநாதைக் கவிதைகள் - கவிதை!!

 


அந்தரத்தில்

பறந்தலைந்துடைந்த

சிறுபிள்ளை ஊதிய
நீர் குமிழியாக
என் நிறக்கனாக்கள்!!
நிச்சயிக்கப்பட்டத நாழியில்
அலங்காரம் கலையாமல்
உடைந்தழும்
கண்ணீர் கோடுகளிலெல்லாம்
உன வாசம்.!!
சிறகொடுங்கி
வரத்தெரியாத உன்
அன்பின் வீம்புகள்
என் ஜன்னல் இடுக்குகளை
குறை கூறும்!!
சூழ்நிலை கைதிகள் என
வாக்குறுதிகளை
வாபஸ் பெற முடிகிறது
உன்னால் மிக சுலபமாக!!
என்றுமே கலையாத
உன் ஆதி மௌனத்தைதான்
அண்ணாந்து
பார்த்தழுந்துக்கொண்டிருக்கிறது
என் அனாதை கவிதைகள்!!
அனா
Blogger இயக்குவது.