கல்வியை வியாபாரமாக்கும் தனியார் கல்வி நிலையம்!


வடமராட்சி பகுதியில் கல்விக்காக ஒருவருட கால பணத்தை முற்கூட்டியே செலுத்த வேண்டும் என வற்புறுத்தும் ஆசிரியரால் மனமுடைந்து போயுள்ளதாக பெற்றோர் விசனம் வெளியிட்டுள்ளனர். இச்செயல் கரவெட்டி துன்னாலை பகுதியில் இயங்கும் ஆங்கில மொழி மூலமான தனியார் கல்வி நிறுவனத்திலே நடைபெறுவதாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக மாணவர்களின் பெற்றோர் கருத்து தெரிவிக்கையில்,  வடமராட்சி கரவெட்டி என்றால் அன்றைய காலம் முதல் இன்று வரை தடக்கி விழுந்தால் கூட ஒரு கற்றவன் காலில் தான் விழுவான் என்ற பெருமை உண்டு. இப்படிபட்ட ஊரில் ஒரு ஆங்கில மொழி கல்வி நிறுவன இயக்குனர் காசை தான் உணவாக உண்கிறாரோ என கேள்வி எழுகிறது.
அதாவது வடமராட்சியில் பல தனியார் கல்வி நிறுவனம் உண்டு.க.பொ.த உயர்தர மாணவர்கள் கற்கும் கல்வி நிலையத்திற்கு கூட மாதாந்த கட்டணம் 1500ரூபா மட்டுமே. ஆனால் இந்த ஆங்கில மொழி தனியார் கல்வி நிலையத்தில் தரம் 6க்கே 3000ரூ சரி பிள்ளைகளின் கல்விக்கே என எண்ணி நடுத்தர ஏழை மாணவர்களின் பெற்றோர் பல சிரமங்களுக்கு மத்தியில் இம் மாதாந்த பணத்தை செலுத்தி வந்தனர். தற்போது இந்த கல்வி நிலைய நிறுவனர் மாதம் மாதம் செலுத்தும் பணத்தை வருட ஆரம்பத்திலேயே செலுத்த வேண்டும். இல்லையேல் பிள்ளையை சேர்க்க முடியாது என எச்சரித்துள்ளார். இதனால் மனமுடைந்த பெற்றோர் ஒருவர் தற்கொலைக்கு முயன்றதாக தகவல் கசிந்துள்ளது. ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் என சராசரியாக பார்த்தால் 50 இலட்சம் வரை வருட ஆரம்பத்தில் வைப்பிலிடப்படும்.
இது தொடர்பில் கரவெட்டி பிரதேச சபையில் தவிசாளர்,  சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கவனத்தில் எடுக்குமாறும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது தொடர்பாக கல்வியியலாளர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,  இத் தனியார் கல்வி நிலையம் மாணவர்களுக்கு பல கட்டுப்பாடுகளை விதிக்கிறது. இதனால் ஒருவிடயம் பாடமாக்காமல் வந்தால் அதற்கு தண்டப்பணம் அறவிடல், வருகையில் குறைபாடு காணப்பட்டால் தனியார் கல்வி நிறுவனத்தில் இருந்து நீக்கி விடல் என பல இறுக்கமான சட்டதிட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் பரீட்சைக்கு எதிர்கொள்ளும் வினாக்களுக்கு விடை அளித்தது சித்தியடைகின்றனர். வடமராட்சியில் பல ஆங்கில மொழி மூலமான தனியார் கல்வி நிறுவனங்கள் இயங்குகின்றன. பெற்றோர்கள் குறித்த கல்வி நிலையத்தில் தமது பிள்ளைகளை சேர்க்காது ஏனைய கல்வி நிறுவனங்களில் சேர்ப்பதே இதற்கான தீர்வாகவும் அமையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.