கனவும் பலனும் - ஆன்மீகம்!!

 


1. கோவிலைக் கண்டால் அந்த இறைவனின் அருளால் நினைத்த செயல்கள் உடனடியாக நிறைவேறும்.


2. கோவிலுக்குள் செல்ல முடியாமல் கூட்டத்தில் மாட்டிக் கொள்வது போல் கனவு வந்தால், சில எதிர்பார்க்காத பிரச்சனையில் சிக்கிக்கொண்டு துன்பமடைவர்.


3. ஆலயத்தில் நாம் மட்டும் தனியாக இருந்து கோவில் கதவுகள் சாத்தப்பட்டது போல் கனவு வந்தால், செய்து வரும் தொழிலில் பிரச்சனை ஏற்படப் போகிறது என்று பொருள்.


4. கோவிலின் வாசலை திறந்து உள்ளே செல்வது போல் கனவு வந்தால் புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி அடைய போகிறீர்கள் என்று பொருள்.


5. கனவில் கடவுளுக்கு மாலை அணிவிப்பது போல கனவு வந்தால் நல்ல வளர்ச்சியை அடைய போகிறீர்கள் என்று அர்த்தம்.


6. எந்தக் கடவுளை கனவில் கண்டாலும் பிரச்சனைகள் விலகும். எல்லோரையும் வெற்றி கொள்ளும் சக்தி உங்களுக்கு கிடைக்கும்.


7. ஒரு கோவில் கோபுரத்தைக் கனவில் கண்டால், வாழ்க்கையில் முன்னேறப் போகிறீர்கள் என்று பொருள். மேலும் உங்களின் பாவங்கள் நீங்கி விட்டன என்றும் பொருள்.


8. கோவிலில் வழங்கப்படும் பிரசாதத்தைப் பெற்றுக்கொள்வது போல் கனவு வந்தால் சிலரால் மனக்கவலைகள் ஏற்படும் என்று பொருள்.


9. கோவில் தெப்பத்தைக் கனவில் கண்டால் நாம் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும்.


10. கடவுளிடம் பேசுவது போல் கனவு காண்பது மிகவும் நல்லது. இது விரைவில் நன்மை பெறப் போவதன் அறிகுறியாகும்.


11. விஷ்ணுவை எந்தக் கோலத்தில் கனவில் கண்டாலும் செல்வ செழிப்பு ஏற்படும்.


12. விஷ்ணு கருடன் மீது வருவது போல கனவு கண்டால் வழக்குகள் சாதகமாக முடியும்.


13. கடவுள் விக்கிரகத்தைக் கனவில் கண்டால் அந்த கடவுளை தரிசனம் செய்வது உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் நல்லது.


14. கோவில் மணியைக் கனவில் கண்டால் நினைத்த காரியம் வெற்றியுடன் முடியும்.


15. கோவில் மணி அடிப்பது போல கனவு கண்டால் பொருள் வரவு உண்டு.


16. கோவில் மணி அறுந்து விழுவது போல கனவு கண்டால் செய்யும் செயல்களில் இடையூறுகள் ஏற்படும்.


17. அய்யனார் தெய்வத்தைக் கனவில் கண்டால் சகல சௌகரியமும் கிட்டும்.


18. நவக்கிரகங்களைக் கனவில் கண்டால் அருகில் உள்ள நவக்கிரகக் கோவிலுக்குச் சென்று ஒன்பது முறை சுற்றி வர வேண்டும். இல்லையேல் தீமை ஏற்படும்.


19. விநாயகரை கனவில் கண்டால் உங்களின் எல்லாப் பிரச்சனையும் முடிந்து விட்டது என்று பொருள்.


20. யானை உங்களைத் துரத்துவது போலக் கனவு வந்தால் நீங்கள் விநாயகருக்கு நேர்த்திக் கடன் வைத்துள்ளீர்கள் என்று பொருள்.


21. யானை உங்களை ஆசீர்வாதம் செய்வது போல கனவு கண்டால் உங்களின் அனைத்துச் செயல்களும் வெற்றியுடன் முடியும் என்று பொருள்.


22. முருகனைக் கனவில் கண்டால் உங்களின் எல்லா விதமான தோஷமும் நீங்கிவிட்டது என்று பொருள். உங்களுக்கு நடப்பது எல்லாமே நன்மையாகவே நடக்கும்.


23. அம்பாள்/அம்மனைக் கனவில் கண்டால் அவளின் பரிபூரண அருள் உங்களுக்குக் கிடைத்துவிட்டது என்று பொருள்.


24. அம்பாள்/அம்மனுக்குக் குங்கும அர்ச்சனை செய்வது போல கனவு வந்தால் எந்த தீமையும் நம்மை அண்டாது என்று பொருள்.


25. திருநீறு பூசுவது போல கனவு கண்டால் நல்ல ஞானம் பிறக்கும்.


26. கோவிலைக் கனவில் கண்டால் நன்மையான பலன்கள் ஏற்படப் போகிறது என்று பொருள்.


27. பாழடைந்த கோவிலைக் கனவில் கண்டால் செய்யும் செயல்களில் தோல்வியும், பொருள் நஷ்டமும் ஏற்படும்.


28. கோவிலில் இறைவனை வழிபடுவதுபோல் கனவு கண்டால் செய்யும் செயல்களில் முதலில் சில இடர்பாடுகள் தோன்றும். ஆனால் தெய்வ அருளால் முடிவில் நன்மையாகவே முடியும்.


29. கனவில், ஆலய மணியோசையைக் கேட்டால், குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்குக் குழந்தைச் பாக்கியம் உண்டாகும். பொருள் வரவும் பெருகும்.Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.