சொக்லேற் கனவுகள் 14 - கோபிகை!!

 


ஒதுக்குப்புறமாயிருந்த 

அந்த வீடு 

மாலைகளாலும்

தோரணங்களாலும்

அலங்கரிக்கப்பட்டிருந்தது. 

தாத்தா பாட்டியின்

இல்லற வாழ்வில்

அன்று

ஐம்பதாவது 

திருமண நாள். 


அதிகாலை முதல் 

அனைவருக்கும் 

பரபரப்பு தான்....


அலங்கார வேலைகளுக்காய்

அங்குமிங்குமாய் 

ஓடிக்கொண்டிருந்தாள் 

அனுதி....


வெளிவேலைகளில்

பம்பரம் போல

சுழன்றுகொண்டிருந்தான்

ஆதித்தன். 


நேரம் இறக்கை கட்ட

விழா நேரமும்

வந்து சேர்ந்தது. 

ஜம்மென்று

வந்து நின்ற 

அதித்தனின் விழிகள்

அனுதியை 

தேடித்துழாவின.


'என்ன மருமகனே....

விழி வலை வீசுது?'

கேட்டபடி வந்தார்

அனுதியின் சித்தப்பா,

இவனுடைய மாமா......


ஒன்றும் இல்லை 

என்பது போல

அங்குமங்குமாய்

தலையை ஆட்டினான்...


அப்போது பார்த்து.

அங்கே வந்த அத்தை,

'அனுதியைத் தேடுறேன்னு

தைரியமா

சொல்லு மருமகனே'

என்றார். 

அண்ணி....நீங்கதான்

மருமகனை விட்டுக்

கொடுக்க மாட்டீங்களே

என்றார் சிரித்தபடி

அனுதியின் சித்தப்பா....


'உறவுகள்தான் 

எவ்வளவு 

உன்னதமானவை'

எண்ணம் ஓடியது 

அவனுக்குள்....


அப்போது அவனுக்குப்

பின்னாலிருந்து

கேட்டது அவளின்

கீச்சுக் குரல்.....


அவசரமாய் 

திரும்பியவன்

அச்சடித்தது போல

நின்றான். 


நிலவிற்குப் 

பொட்டிட்டால்

அது நளினமாய் 

புன்னகைத்தால்

நிலவுப் பெண்

நடை பயின்றால், 


எப்படி இருக்குமோ

அப்படி இருந்தாள்

அனுதி. 


அயல் வீட்டுச்

சந்துதன்

அவளை 

சைற் அடிக்க,

இவனுக்கு 

முகம் கடுத்தது...


கனவுகள் தொடரும்

கோபிகை.Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colomboகருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.