சுகாதார நடைமுறைகளை பின்பற்றத்தவறிய பலர் கைது!!


சுகாதார நடைமுறைகளை பின்பற்றத்தவறிய மேலும் 16 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இன்று (வெள்ளிக்கிழமை) காலை 6மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதிக்குள்ளே குறித்த 16பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ்மா அதிபரும் பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

முகக்கவசம் அணிய தவறிய குற்றச்சாட்டிலேயே பெரும்பாலானோர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்தவகையில் கடந்த ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் மொத்தம் 2,997 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அத்துடன் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறுகின்றவர்களைக் கைது செய்யும் நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என அவர் மேலும் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.