குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படாது என அறிவிப்பு!


கேரளாவில் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படாது என முதலமைச்சர் பினராயி விஜயன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரத்தில் பேசிய அவர் இதுகுறித்த அறிவித்தலினை வெளியிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் சி.ஏ.ஏ. சட்டம் கொண்டு வரப்பட்டவுடன் நாடு முழுவதும் அதற்கு எதிராக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

கேரளாவில் ஆளும் கம்யூனிஸ்டு அரசு, இந்த சட்டம் கேரளாவில் அமல்படுத்தப்படாது என கடந்த ஆண்டு கூறியது.

மேலும் உச்சநீதிமன்றத்திலும் இதற்கு எதிராக வழக்கு தொடர்ந்த முதல் மாநிலம் கேரளா என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.