ஹற்றனில் கவனயீர்ப்பு போராட்டம்!


‘கொரோனாவுக்கு மத்தியில் மண்ணையும் பெண்ணையும் காப்போம்’ எனும் தொனிப்பொருளில் ஹற்றன் மல்லிகைப்பூ சந்தியில் மலையகப் பெண்களின் கவனயீர்ப்பு நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பெண்கள் பச்சை நிற ஆடை அணிந்திருந்ததுடன், ‘நூறு கோடி மக்களின் எழுச்சி’, ‘இயற்கை உணவுகள் உண்போம்’, ‘ஆரோக்கியமான வாழ்வை வாழ்வோம்’, ‘இயற்கையைக் காப்போம்’ போன்ற வசனங்களை எழுதிய பதாதைகளைக் காட்சிப்படுத்தியவாறு மிகவும் அமைதியான முறையில் சுகாதார வழிமுறைகளுக்கு அமைய இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை கவனயீர்ப்பு இடம்பெற்றது.

இயற்கையற்ற உணவுப் பயன்பாட்டின் காரணமாக உலகில் வாழும் நூறு கோடி மக்கள் பல்வேறு தொற்று நோய்களுக்குள்ளாகி வருவதுடன் இயற்கை அழிவின் காரணமாக பல்வேறு பிரச்சினைகளுக்கும் முகங்கொடுத்து வருவதாக கவனயீர்ப்பில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு, பெண்களுக்கும் மண்ணுக்கும் நெருங்கிய தொடர்பு காணப்படுவதாகவும், இதனால், மண்ணையும் பெண்ணையும் காக்கின்ற பொறுப்பு பெண்களுக்கு இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.

இதன்போது, 18 தோட்டங்களைச் சேர்ந்த சுமார் நூறுக்கு மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர்.






கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.