மீண்டு வரும் சுஷாந்த் காதலி!


 சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்தை தொடர்ந்து மிகப்பெரிய பிரச்சனையில் சிக்கியது அவரது காதலியும் நடிகையுமான ரியா சக்கரவர்த்தி தான். ஒரு மாதம் சிறையில் இருந்த அவர் மன ரீதியாக முழுவதுமாக உடைந்து போயிருந்த நிலையில், மீண்டும் ஜிம்மில் வெறித்தனமாக வொர்க்கவுட் செய்ய ஆரம்பித்துள்ளார் ரியா சக்கரவர்த்தி.

விரைவில் புதிய படத்தில் நடிக்க தயாராகி வருகிறாரா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

மறைந்த பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மறைவுக்குப் பிறகு ரொம்பவே கஷ்டப்பட்டது ரியா சக்கரவர்த்தி தான். சுஷாந்தின் பணத்தை கையாடல் செய்தார் என்றும், சுஷாந்த் மரணத்திற்கு இவர் தான் காரணம் என்றும் ஏகப்பட்ட சர்ச்சைகளிலும் வழக்குகளில் சிக்கித் தவித்தார்.

சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரண வழக்கைத் தொடர்ந்து பூதாகரமான போதைப் பொருள் விவகாரத்தில் ஆதாரங்களுடன் சிக்கிய நடிகை ரியா சக்கரவர்த்தியை கடந்த ஆண்டு செப்டம்பர் 8ம் தேதி என்சிபி அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர். அந்த வழக்கில் கிட்டத்தட்ட ஒரு மாத காலம் சிறையில் இருந்த ரியா, அக்டோபர் 4ம் தேதி ஜாமினில் வெளியே வந்தார்.

சுஷாந்த் சிங் ராஜ்புத் விவகாரத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ரியா சக்கரவர்த்தியின் வழக்கு இன்னும் விசாரணையில் உள்ள நிலையில், பாலிவுட்டில் புதிய படங்கள் அவருக்கு கிடைக்குமா? இல்லை முற்றிலுமாக ஒதுக்கப்படுவாரா? என ஏகப்பட்ட கேள்விகள் எழுந்து வருகிறது. வீட்டை விட்டு வெளியே தலை காட்ட மாட்டார் என விமர்சிக்கப்பட்ட நிலையில், தற்போது ரியா வெளியே வந்துள்ளது பலரையும் ஆச்சர்யப்படுத்தி உள்ளது.

கிட்டத்தட்ட ஒரு மாத கால ஜெயில் வாழ்க்கை நடிகை ரியா சக்கரவர்த்தியை முற்றிலுமாக உருக்குலைத்து விட்டது என்றே சொல்லலாம். இந்நிலையில், மறுபடியும் தனது உடலையும் மனதையும் கட்டமைக்க ஜிம்மில் வெறித்தனமாக வொர்க்கவுட் செய்து வருகிறார் ரியா. சகோதரர் சோவிக் உடன் ஜிம்மில் இருந்து ரியா வெளியேறும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

பொதுவாக ஜிம்மில் இருந்து வெளியேறும் பாலிவுட் நடிகைகளை வளைத்து வளைத்து போட்டோ எடுக்க புகைப்படக் கலைஞர்கள் காவல் காத்து நிற்பார்கள். அதே போல் ஜிம்மில் இருந்து வெளியேறிய ரியாவையும் அவரது சகோதரரையும் போட்டோ மற்றும் வீடியோ எடுத்தனர். வெளியே வந்த சோவிக் தம்ப்ஸ் காட்டி சென்றார். ஆனால், ரியாவை எவ்வளவு அழைத்தும், அவர் போஸ் கொடுக்க மறுத்து, அவர்களை அவாய்டு செய்து விட்டு தனது காரில் அவசர அவசரமாக ஏறிச் சென்றார்.

மீண்டும் ஜிம்மிற்கு வந்து வொர்க்கவுட் செய்யும் ரியாவின் வீடியோ ஏகப்பட்ட கேள்விகளையும் சமூக வலைதளங்களில் கிளப்பி உள்ளன. புதிய பாலிவுட் படத்தில் ஏதும் கமீட் ஆகி உள்ளாரா ரியா என்றும் அடுத்து என்ன புராஜெக்ட் செய்யப் போகிறார் என்றும் கேட்டு வருகின்றனர். 2020ம் ஆண்டு ரியாவுக்கு மிகவும் மோசமான ஆண்டாக அமைந்தது. ஆனால், 2021ம் ஆண்டு நல்ல ஆண்டாக மாறும் என்றே அவரது நலம் விரும்பிகள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.