மதுபானம் – சிகரட் பயன்படுத்துவோருக்கு தடுப்பூசி இல்லை!
மதுபானம் மற்றும் சிகரட் பாவிப்போருக்கு கொரோனா தடுப்பூசி வழங்க முடியாது என சிகரட் மற்றும் மதுசாரம் தொடர்ரபான தேசிய அதிகாரசபையின் தலைவர் சமாதி ராஜபக்ஷ கூறியுள்ளார்.
சிகரட் மற்றும் மதுபானம் பயன்படுத்துவோருக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகவுள்ள நிலையில் அவர்களுக்கு தடுப்பூசி வழங்க முடியாது என்றும் எனவே அதனை கவனத்தில் எடுக்குமாறும் அவர் கூறியுள்ளார்.
மதுபானம் மற்றும் சிகரட் பாவனையாளர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட வேண்டும் என்றால், அவர்கள் தடுப்பூசி வழங்கப்பட்ட தினத்திலிருந்து குறைந்தது 6 மாதங்களாவது அவற்றை பயன்படுத்தாது இருக்கவேண்டும் என்றும் சமாதி ராஜபக்ஷ கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை