இலங்கையில் கொரொனா அச்சத்தில் ஆதிவாசிகள்!


 இலங்கையில் மிகச்சிறிய அளவிலான ஆதிவாசிகளும் கொரோனா அச்சத்தினால் உறைந்திருக்கின்றனர்.

ஆதிவாசி தலைவரான ஊருவரிகே வன்னிலெத்தோ இதனை தெரிவித்துள்ளார்.

பதுளை மாவட்டத்தில் நேற்று மட்டும் 61 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களில் 33 பேர் தம்பான ஆதிவாசிகள் வாழ்கின்ற பகுதிக்கு மிக அருகிலுள்ள மஹியங்கனையில் உள்ளவர்களாவர்.

அந்த வகையில் அவர்களிடமிருந்து ஆதிவாசிகளுக்கும் கொரோனா தொற்று ஏற்படலாம் என்கிற அச்சம் நிலவுவதால் அரசாங்கம் தகுந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை முன்வைத்திருக்கின்றார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.