வவுனியாவில் நீர்வெட்டு!
வவுனியாவில் நீர் வழங்கல் திட்டத்தில் தடை ஏற்படும் என நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வவுனியா நீர் வழங்கல் திட்டத்தின் கீழ் வரும் வவுனியா நகரை அண்டிய பிரதேசங்களில் உள்ள நீரிணைப்புக் குழாய்களில் அவசர மேம்பாட்டினை மேற்கொள்ள வேண்டியிருப்பதனால் எதிர்வரும் சனிக்கிழமை (13.02.2021) காலை 10 மணிமுதல் இரவு 10 மணிவரை நீர் வழங்கல் செயற்பாடானது வவுனியா நகரம்இ குருமன்காடுஇ சூசைப்பிள்ளையார் வீதிஇ மன்னார் வீதி மற்றும் வைரவப்புளியங்குளம் பகுதிகளில் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதனால் ஏற்படும் அசௌகரியங்களுக்கு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையானது தனது வருத்தத்தை தெரிவித்துக்கொள்கின்றது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை