காரைநகரில் கடற்படையினருக்கு காணி சுவீகரிப்பு தடுத்து நிறுத்தப்பட்டது!

 


காரைநகரில் கடற்படையினரின் தேவைக்காக காணி சுவீகரிப்பதற்காக (17) இடம்பெறவிருந்த அளவீட்டுப் பணிகள் தமிழ்த்தேசிய அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்களின் கடும் எதிர்ப்பினால் தற்காலிகமாகத் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.   

காரைநகர் இந்துக் கல்லூரிக்குச் சொந்தமான இரண்டு பரப்புக் காணி மற்றும் பொதுமக்களுக்குச் சொந்தமான தனியார் காணிகள் ஆறு பரப்பு என 8 பரப்பைக் கடற்படையின் எலார கடற்படைத் தளம் அமைப்பதற்காக சுவீகரிக்க கடற்படையினர் திட்டமிட்டிருந்தனர்.

இன்று காலை மேற்படி காணிகளை அளவீடு செய்வதற்கு நில அளவைத் திணைக்கள அதிகாரிகள் முயற்சித்தனர்.

தகவலறிந்து அங்கு ஒன்றுகூடிய பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம்  சிறிதரன், செல்வராசா கஜேந்திரன், தமிழரசுக் கட்சியின் தலைவரும்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, வடக்கு அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம்  சரவணபவன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான விந்தன் கனகரட்ணம், பாலச்சந்திரன் கஜதீபன், தமிழ்த்தேசியப் பண்பாட்டுப் பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சுவீகரன் நிஷாந்தன் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பினை வெளியிட்டனர். இதனையடுத்து நில அளவைத் திணைக்களத்தினர் அங்கிருந்து திரும்பிச் சென்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.