வடமாகாண முதலமைச்சர் வேட்பாளர் மாவையா?

 


வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக முன்னாள் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகனை களமிறக்க எம்.ஏ.சுமந்திரன் தரப்பினர் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

நிர்வாக அனுபவமுடையவர் என்ற வகையில் அவரைக் களமிறக்குவதற்கு சுமந்திரன் தரப்புத்  திட்டமிட்டுள்ளது. 

வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக மாவை சேனாதிராசாவைக் களமிறக்குவதற்கு தயாராகி வரும் நிலையில் அவரைக் கழற்றி விட வேதநாயகனை களமிறக்கும் நகர்வை எம்.ஏ.சுமந்திரன் ஆரம்பித்துள்ளார்.

எனினும், இம்முறை மாவை சேனாதிராசா முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்க வேண்டும் எனத் தமிழ்அரசுக் கட்சியில் அங்கம் வகிக்கும் பெரும்பாலானவர்களின் நிலைப்பாடாக உள்ளதாகத் தெரியவருகிறது.

இதனால், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் அடுத்த வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் பெரும் எதிர்பார்ப்புக்கள் எழுந்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. 

(எஸ்.ரவி)  

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.