மார்ச் 1 முதல் சுவிட்சர்லாந்தில் பொதுமுடக்க விதிகள்!

 


மார்ச் மாதம் 1ஆம் திகதி முதல் கடைகள், அருங்காட்சியகங்கள் மற்றும் விலங்கியல் பூங்காக்களை திறக்கலாம் என சுவிட்சர்லாந்து அறிவித்துள்ளது.

அத்தியாவசியமற்றவை என்ற பிரிவின் கீழ் வரும் கடைகள், அருங்காட்சியகங்கள் மற்றும் நூலகங்கள் ஆகியவை மார்ச் மாதம் 1ஆம் திகதி திறக்கப்பட இருப்பதுடன், வெளியிடங்களில் விளையாடும் விளையாட்டுகள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும், விலங்கியல் பூங்காக்கள் மற்றும் தாவரவியல் பூங்காக்களுக்கு செல்வதற்கும் அனுமதியளிக்கப்பட உள்ளதாக சுவிஸ் அரசு அறிவித்துள்ளது.

நாடு படிப்படியாக கொரோனா கட்டுப்பாடுகளிலிருந்து வெளியேறி சாதாரண வாழ்வுக்கு திரும்பலாம் என அறிவித்துள்ள அரசு, மார்ச் 1ஆம் திகதி கட்டுப்பாடுகள் நெகிழத்தப்படும் முதல் கட்டமாக, இந்த அறிவிப்பை செய்துள்ளது.

15 பேர் வரை பங்கேற்கும் வெளியிடங்களில் நிகழ்த்தப்படும் குடும்ப நிகழ்வுகள், விளையாட்டு மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளுக்கும் அனுமதியளிக்கப்பட உள்ளது. அடுத்த கட்டமாக, மார்ச் 22ஆம் திகதி, மேலும் சில கட்டுப்பாடுகள் நெகிழ்த்தப்பட உள்ளன.

அப்போது உணவகங்களில் வெளியே அமர்ந்து சாப்பிடுவது, வீட்டிலிருந்து வேலை பார்ப்பதில் மாற்றங்கள், விளையாட்டு மற்றும் கலை நிகழ்ச்சிகளை காண குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்களுக்கு அனுமதியளித்தல் ஆகிய மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.

வரும் வாரங்களில் கொரோனா பரவல் நிலைமையில் முன்னேற்றம் காணப்படும் பட்சத்தில், உணவகங்களுக்கு உள்ளே அமர்ந்து சாப்பிடுவது குறித்தும் பரிசீலிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.