ஜூலை மாதத்துக்குள் முடிவுறும்!
ஒவ்வொரு அமெரிக்கர்களுக்கும் ஜூலை மாதத்துக்குள் தடுப்பூசி செலுத்தப்படுமென அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
அனைத்து அமெரிக்கர்களுக்கும் எப்போது தடுப்பூசி போடப்படும் என அவரிடம் வினவியபோதே அவர் இவ்வாறு பதில் அளித்தார்.
இதன்போது பதில் வழங்கிய அவர்,
இந்த ஆண்டு ஜூலை மாதத்துக்குள் எங்களிடம் 600 மில்லியன் அளவுக்கு தடுப்பு மருந்து இருக்கும்.
இது ஒவ்வொரு அமெரிக்கர்களுக்கும் தடுப்பூசி செலுத்துவதற்கு போதுமானது.
அடுத்த கிறிஸ்துமசுக்குள் நாம் மிகவும் மாறுபட்ட சூழ்நிலையில் இருப்போம் என்றார்.
கருத்துகள் இல்லை