இலங்கையில் பாஜக ஆட்சி அமைக்க திட்டமா?

 


உலகநாடுகள் பாஜகவின் கொள்கையால் கவரப்படும் என்பதையே எங்கள் முதலமைச்சர் தெரிவித்தார். ஆனால் அதன் அர்த்தம் பாஜக அரசாங்கத்தை அமைக்கும் என்பதில்லை என திரிபுராவின் சட்ட அமைச்சர் ரத்தன்லால் நாத் தெரிவித்துள்ளார்.

பாஜக இலங்கையில் ஆட்சி அமைப்பது தொடர்பில் திரிபுரா முதலமைச்சர் சமீபத்தில் தெரிவித்த சர்ச்சைக் கருத்தை தெளிவுபடுத்தும் வகையில் திரிபுராவின் சட்ட அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து தெரிவிக்கையில்,

அமெரிக்கா இலங்கை உட்பட பல நாடுகள் பாஜகவின் கொள்கையால் கவரப்பட்டு அந்த கொள்கையை ஏற்றுக்கொள்ளும் நிலையில் உள்ளன.

உலகநாடுகள் பாஜகவின் கொள்கையால் கவரப்படும் என்பதையே எங்கள் முதலமைச்சர் தெரிவித்தார் ஆனால் அதன் அர்த்தம் பாஜக அரசாங்கத்தை அமைக்கும் என்பதில்லை.

முதலமைச்சரின் கருத்து தவறாக அர்த்தப்படுத்தப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முழு உலகமும் பாஜகவின் கொள்கைகளை சிந்தனைகளை ஏற்றுக்கொள்ளும் என நாங்கள் கருதுகின்றோம் என தெரிவித்துள்ள திரிபுராவின் சட்ட அமைச்சர்,

இலங்கையில் உள்ளவர்கள் பாஜகவின் சிந்தனைகளை ஏற்றுக்கொள்வது குறித்து சிந்திக்கின்றார்கள் அமெரிக்காவும் எங்கள் கொள்கையை ஏற்றுக்கொள்வது குறித்து சிந்திக்கின்றது முழு உலகமும் இது குறித்து சிந்திக்கின்றது என குறிப்பிட்டுள்ளார்

நாங்கள் கொரோனா வைரஸ் தடுப்பூசியை தயாரித்தோம் ஏனைய நாடுகள் எங்களிடமிருந்து அதனை கொள்வனவு செய்கின்றன.

அதேபோல் நரேந்திர மோடி தெரிவித்த பின்னர் உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகின்றது.

இவ்வாறாக முழு உலகமும் அவரது சிந்தனைகள் குறித்து சிந்திக்கின்றன என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை திரிபுரா தலைநகர் அகர்தலாவில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் மாநில முதலமைச்சரும், பாஜக தலைவர்களில் ஒருவருமான பிப்லாப் தேப் இந்தியாவையும் தாண்டி அதிகாரத்தை பிடிக்க பாஜக விரும்புவதாக கூறியதாக செய்தி வெளியாகி இருந்தது.

'உள்துறை அமைச்சரான அமித்ஷா, பாஜக தேசிய தலைவராக இருந்தபோது அகர்தலா மாநில அரசு விருந்தினர் மாளிகையில் பல்வேறு தலைவர்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது அவர், இந்திய மாநிலங்களை தாண்டி நேபாளம் மற்றும் இலங்கையிலும் ஆட்சியை விரிவுபடுத்த கட்சி திட்டமிட்டு வருவதாக தெரிவித்தார்' என்று அவர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.