'அருண் விஜய் 33' படத்தில் இணைந்த மேலும் ஒரு பிரபல நடிகர்!

 


நடிகர் அருண் விஜய் நடிக்க இருக்கும் 33வது திரைப்படத்தை இயக்குனர் ஹரி இயக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே.


முதல்கட்டமாக இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் குறித்த தேர்வுகள் நடைபெற்று வருகிறது குறிப்பாக இந்த படத்தில் நாயகியாக பிரியா பவானி சங்கர் மற்றும் முக்கிய கேரக்டர்களில் யோகிபாபு, ராதிகா சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஜெயபாலன், குக் வித் கோமாளி புகழ் உள்பட பலர் ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி இந்த படத்தில் மேலும் ஒரு பிரபல குணசித்திர நடிகர் இணைந்துள்ளார். அவர் ’தலைவாசல்’ விஜய். இந்த படத்தில் தலைவாசல் விஜய் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் உறுதி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பில் விரைவில் தொடங்கப்படும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.