ஓடிடியில் வெளியாகும் த்ரிஷாவின் படம்!

 


கடந்த சில மாதங்களாக திரையரங்குகளுக்கு இணையாக ஓடிடியிலும் புதிய திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன என்பதும் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது என்பதும் தெரிந்ததே.


தமிழ் உள்பட தென்னிந்திய மொழிகளிலும் பாலிவுட் திரை உலகிலும் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களும் ஓடிடியில் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் த்ரிஷாவின் அடுத்த படமும் பிப்ரவரி 5ஆம் தேதி ஓடிடியில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


’நேரம்’ என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்த பிரபல மலையாள நாயகன் நிவின் பாலியுடன் த்ரிஷா நடித்த மலையாள திரைப்படம் ’ஹே ஜூட்’. இந்த திரைப்படம் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான நிலையில் தற்போது இந்த படத்தின் தெலுங்கு டப்பிங் திரைப்படம் ஓடிடியில் பிப்ரவரி 5ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.