நாட்டில் 65,000 ஐ எட்டும் தொற்றாளர் எண்ணிக்கை!


 நேற்று 826 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, தொற்றாளர்களின் எண்ணிக்கை 64,983 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 816 பேர் மினுவாங்கொட-பேலியகொட கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்களாக அடையாளம் காணப்பட்டனர்.

அதன்படி, மினுவாங்கொட-பேலியகொட கொரோனா கொத்தணி 60,990 ஆக அதிகரித்துள்ளது. வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பிய 10 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

நாடு முழுவதும் 66 மையங்களில் 6,585 பேர் தற்போது கொரோனா வைரஸுக்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்று, கொரோனாவிலிருந்து குணமடைந்த 916 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பினர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 58,075 ஆக உயர்ந்துள்ளது.

தொற்று சந்தேகத்தில் 839 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.