ஏப்ரல் 6 ஆம் தேதி தமிழகத்தில் தேர்தல்!

 


தமிழக சட்டப்பேரவைக்கு வரும் ஏப்ரல் 6 ஆம் தேதியன்று ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என தலைமைத் தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

தமிழகம், புதுவை, கேரளம், மேற்குவங்கம், அசாம் ஆகிய 5 சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் அட்டவணையையும் தேர்தல் அறிவிக்கையையும் தலைமைத்தேர்தல் ஆணையர் சுனில் அரோரா டெல்லியில் இன்று வெளியிட்டார்.

அதன்படி, தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி வாக்குப்பதிவும் மே 2 ஆம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது.

வேட்மனுத் தாக்கல் மார்ச் 12 ஆம் தேதியன்று தொடங்கும்

மனுத்தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 19

மார்ச் 20 ஆம் தேதி மனுக்கள் பரிசீலனை நடைபெறும்.

வேட்பு மனு வாபஸ் வாங்க கடைசி நாள் மார்ச் 22

வாக்கு எண்ணிக்கை மே2 ஆம் தேதி நடைபெறும்.

தேர்தல் அறிவிப்பையொட்டி இன்று முதல் தேர்தல் அறிவிக்கை(நோட்டிபிகேசன்) நடைமுறைக்கு வருகிறது. இதன்படி அரசாங்கத்தின் சார்பில் புதிய திட்டங்களோ நிதியுதவியோ அறிவிக்கப்படக்கூடாது. தொடர் நடைமுறைகள் போன்றவை ஆணையத்தின் தடை எதுவும் இல்லாமல் வழக்கம்போல செயல்படுத்தப்படும்

தமிழ்நாடு உள்ளிட்ட தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை மே 2ஆம் தேதி நடைபெறும்.

கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலும் ஏப்ரல் 6 ஆம் தேதியன்றே நடைபெறும்

ராஜ்


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.