ரோவிற்கு தகவல் வழங்கிய சாரா!

 
ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழு தனது அறிக்கையில் சாரா ஜஸ்மின் -புலஸ்தினி ராஜேந்திரன் தொடர்பில் தகவல்கள் இல்லை என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை வெளியாகியுள்ள நிலையில், அது தொடர்பில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. குறித்த அறிக்கை தொடர்பாக எதிர்கட்சிகள் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இந்தநிலையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் தொடர்புபட்டிருந்தவர் என கருதப்படும் சாரா ஜஸ்மின் - புலஸ்தினி ராஜேந்திரன் இந்தியாவிற்கு சென்றமை குறித்து தாக்குதல்கள குறித்து விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழு தனது அறிக்கையில் எதனையும் தெரிவிக்கவில்லை என்று சுட்டிக்காட்டியிருக்கிறது.

சஹ்ரான் ஹாசிமின் நெருங்கிய சகாவான சாரா ஜஸ்மின் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து இந்தியாவின் ரோவிற்கு முன்கூட்டியே தகவல்களை வழங்கினார் என தேசிய புலனாய்வு பிரிவின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார் எனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி நினைவுபடுத்தியுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புபட்டவர்களை கைதுசெய்யும் நடவடிக்கையின் போது சாய்ந்தமருதுவில் இடம்பெற்ற குண்டுவெடிப்பின் போது அங்கிருந்து தப்பிய புலஸ்தினி அதன் பின்னர் இந்தியாவிற்கு தப்பிச்சென்றார் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி இது குறித்து கவனம் செலுத்தவேண்டும் என சுதந்திரக்கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.