மேலும் 615 பேர் நாட்டை வந்தடைந்தனர்!


கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த 615 பேர், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இன்று (சனிக்கிழமை) காலை 8.30 அளவில் நிறைவடைந்துள்ள 24 மணித்தியாலத்தில், 13 விமானங்கள் ஊடாக இவர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இவ்வாறு நாடு திரும்பியவர்களில் கட்டாரிலிருந்து 173 பேரும் டுபாயிலிருந்து 135 பேரும் அபுதாபியிலிருந்து 75 பேரும் மலேசியாவிலிருந்து 65 பேரும் சிங்கப்பூரிலிருந்து 57 பேரும்  அடங்குகின்றனர்.

இவர்கள் அனைவரும், முப்படையினரால் நடாத்திசெல்லப்படும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை குறித்த காலப்பகுதியில் 431 இலங்கையர்கள், பல்வேறு தேவைகளின் நிமித்தம் 9 விமானங்கள் ஊடாக  வெளிநாடுகளுக்கு பயணித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.