திலீபத்தின் தடம் -அம்பிகை அம்மா.!!


அம்மனின் பெயர் கொண்ட அவதாரம்

அண்ணனின் தடம் தழுவும் ஆயுத ராகம்

பொங்கிய தமிழென எழுந்த தாய் வீரம்

நெஞ்சுரம் சுமந்த திலீபத்தின் உயிர் ஈகம்.


பசி கிடந்து நீதியை கேட்கின்ற யாகம்

பார் எங்கும் அதிரட்டும் உன் ஓர்மத் தாளம்

திலீபனை வணங்கி நீ மூட்டிய அகிம்சைத் தீ

தீராத தமிழீழத் தாகத்தின் விடுதலை மெய்.


தாயே உன் பசிப் போர் அடையட்டும் வெற்றியை

தரணியே அறியட்டும் தமிழரின் பக்தியை

அடிமையை உணர்ந்த உன் எழுகை புனிதம்

அம்பிகை அம்மா நீ எங்கள் ஈழம் கண்ட மனிதம்.


                                                        கலைப்பரிதி.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.