இலங்கைத் தமிழ் பெண்ணை மோசடி செய்த நடிகர் ஆர்யா!


 நடிகர் ஆர்யா இலங்கையை சேர்ந்த தமிழ்ப் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி 80 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக தகவலொன்று வெளியாகியுள்ளது.இலங்கையை சேர்ந்த தமிழ் பெண்ணான விட்ஜா ஜெர்மனி நாட்டின் சுகாதாரத்துறையில் பணி புரிந்து வருகிறார். இவரை, பிரபல தமிழ் நடிகர் ஆர்யா திருமணம் செய்து கொள்வதாக கூறி லட்சக்கணக்கில் மோசடி செய்ததாக கூறப்படுகின்றது.


அத்தோடு தொடர்ந்து, தான் ஏமாற்றப்பட்டதாக நடிகர் ஆர்யா மீது விட்ஜா , பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவர் அலுவலகங்களுக்கு ஒன்லைன் வழியாக புகார் அளித்துள்ளார்.


அத்துடன் அவர், தனக்கும் நடிகர் ஆர்யாவின் தயாருக்கு நடந்த வாக்குவாதங்கள், பண பரிவர்த்தனைகளுக்காக ஆதாரங்களையும் தன் புகாரில் அவர் இணைத்துள்ளார். இந்த புகார் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு உள்துறை அமைச்சகம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.


அத்தோடு இது குறித்து விட்ஜா கூறுகையில், ”நான் ஜெர்மனி நாட்டின் சுகாதாரத் துறையில் பணி புரிகிறேன். கொரோனா வைரஸ் லொக்டவுன் காரணமாக தனக்கு கைவசம் படங்கள் இல்லை. இதனால், பணத்துக்கு கஷ்டப்படுவதாக ஆர்யா என்னிடத்தில் கூறினார்.


அத்தோடு உன்னை நான் விரும்புகிறேன். திருமணம் செய்து கொள்ளவும் ஆசைப்படுகிறேன் என்றார். பிறகு, பணத்தை என்னிடத்தில் இருந்து பெற்றார்” எனக் கூறியுள்ளார்.


சில மாதங்கள் கழித்து அவரைப் போல பல பெண்களை அவர் ஏமாற்றியுள்ளது அவருக்கு தெரிந்ததாகவும், அவரை மோசமான வார்த்தைகளால் திட்டியதாகவும் கூறியுள்ளார்.


குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,


”இந்த விஷயத்தில் பிரதமர் அலுவலகமும் ,உள்துறை அமைச்சகமும் தலையிட்டதால் எனக்கு நியாயம் கிடைக்கும் என்று நம்புகிறேன். இப்போது, ஆர்யா மீது புகார் கொடுத்துள்ளதால், தற்கொலை செய்து கொள்ள போவதாக என்னை மிரட்டுகிறார்.


மேலும் அவர் எப்படி நாடகம் போட்டாலும் நான் என் புகாரை வாபஸ் பெறப் போவதில்லை. கடந்த சில வருடங்களாக நான் பட்ட துயரத்துக்கு அளவே இல்லை. எனக்கு நீதியும் வேண்டும். இந்த விஷயத்தில் அக்கறை காட்டியதற்காக பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.


அத்தோடு உள்துறை அமைச்சக செயலாளர் கோபால் ஜா தமிழ்நாடு முதலமைச்சர் தனிபிரிவு சிறப்பு அதிகாரி சரவணவேல் ராஜ் ஐ.ஏ.எஸ் – க்கு எனது புகாரை அனுப்பியுள்ளார். விரைவில் , தமிழக அரசு நல்ல நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன்” என்று விட்ஜா தெரிவித்துள்ளார்.


முன்னதாக , ‘எங்க வீட்டு மாப்பிள்ளை‘ என்ற நிகழ்ச்சியின் மூலம் நடிகர் ஆர்யா தனக்கு பெண் தேடும் படலத்தில் ஈடுபட்டார். அதில் 16 பெண்கள் கலந்து கொண்டனர். அப்போது, இலங்கையை சேர்ந்த பெண் ஒருவரும் கலந்து கொண்டார்.


இந்நிலையில், அந்த நிகழ்ச்சியில் இருந்து தனக்கு மனைவியை தேர்வு செய்யாத நடிகர் ஆர்யா, தன்னை விட 19 வயது குறைந்த நடிகை ஷாயிஷாவை திருமணம் செய்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.


#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.