ஜோன்சன் அண்ட் ஜோன்சன் நிறுவனம் தயாரிக்கும் கொரோனா மிகவும் பாதுகாப்பானது!


 ஜோன்சன் அண்ட் ஜோன்சன் நிறுவனம் தயாரிக்கும் ஒற்றை டோஸ் கொரோனா தடுப்பூசி மிகவும் பாதுகாப்பானது என்று அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகம் அறிவித்துள்ளது.


அமெரிக்காவில் அடுத்த சில நாட்களில் இந்த தடுப்பூசியின் பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு விடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகின்ற நிலையில், இந்த தகவல் வெளியாகியுள்ளது.

கடுமையான நோயை தடுப்பதில் இந்த தடுப்பூசி 85 சதவீதத்துக்கும் மேலாக பலன் அளிக்கும் என தரவுகள் கூறுகின்றன. ஆனால் ஒட்டுமொத்தமாக 66 சதவீதம் பலன் அளிக்கும் என்று தெரிய வந்துள்ளது.

அடுத்த வாரம் ஜோன்சன் அண்ட் ஜோன்சன் நிறுவனம் 30 இலட்சம் டோஸ் தடுப்பூசியை விடுவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எதிர்வரும் மார்ச் மாத இறுதிக்குள் 2 கோடி டோஸ் தடுப்பூசிகளை விநியோகிக்க முடியும் என்று ஜோன்சன் அண்ட் ஜோன்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.