3143 பேர் விதிமுறைகளை மீறியதற்காக கைது!


தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறியதற்காக 3143 பேர் இதுவரை கைது செய்யப் பட்டுள்ளனர் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சமூக இடை வெளியை பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டிலேயே கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அதன்படி, கடந்த ஒக்டோபர் 30 ஆம் திகதியிலிருந்து இதுவரை முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சமூக இடைவெளியைப் பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டில் இது வரை 3143 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என அஜித்ரோஹண தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.