மஹா சிவராத்திரிக்கு திருக்கேதீஸ்வரம் செல்ல தடை!


மன்னார் திருக்கேதீஸ்வர மஹா சிவராத்திரி விழாவில் வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள் கலந்துகொள்ள தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இது வெளி மாவட்ட பக்தர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு வெளி மாவட்டத்தில் இருந்து வருகை தருகின்றவர்களை தவிர்த்து மன்னார் மாவட்டத்தில் உள்ள மக்களின் பங்களிப்புடன் மஹா சிவராத்திரி விழாவை கொண்டாட ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டச் செயலகத்தில் நேற்று (15) திங்கட்கிழமை மாலை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மேல் தலைமையில் மன்னார் திருக்கேதீஸ்வர மஹா சிவராத்திரி விழா தொடர்பாக விசேட கலந்துரையாடல் இடம் பெற்றது.

இந்த கலந்துரையாடலில் பல்வேறு விடையங்கள் குறித்து ஆராயப்பட்டது.

எதிர் வரும் மார்ச் மாதம் 11 ஆம் திகதி இடம் பெற உள்ள மன்னார் திருக்கேதீஸ்வர மஹா சிவராத்திரி விழாவினை சுகாதார முறையினை கடைப்பிடித்து எவ்வாறு சிறப்பாக நடத்துவது என்பது தொடர்பாக ஆராயப்பட்டதுடன் அது தொடர்பில் பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டது.

அதன்படி வெளி மாவட்டத்தில் இருந்து வருகை தருகின்றவர்களை தவிர்த்து மன்னார் மாவட்டத்தில் உள்ள மக்களின் பங்களிப்புடன் மஹா சிவராத்திரி விழாவை கொண்டாட ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாத்துக் கொள்ளும் வகையில் ஆலைய பகுதிகளில் மக்கள் நடந்து கொள்ள வேண்டிய அறிவுறுத்தல்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டுள்ளது.

குறிப்பாக வெளி மாவட்டத்தில் இருந்து இம்முறை வருகை தர உள்ள மக்கள் தமது மாவட்டங்களிலே சிவராத்திரி நிகழ்வை அனுஸ்ரிக்குமாறு கோரிக்கை முன் வைக்கப்பட்டது.

கொரோனா தொற்றின் பரவலை தடுக்கும் வகையில் திருக்கேதீஸ்வர மஹா சிவராத்திரி விழாவின் போது பாலாவி தீர்த்தக்காவடி நிறுத்தப்பட்டுள்ளது.

எனவே திருக்கேதீஸ்வரத்திற்கு வருகின்றவர்கள் சுகாதார நடை முறைகளை உரிய வகையில் பின் பற்றிக்கொள்ள வேண்டும்.என தீர்மானிக்கப்பட்டது.

மேலும் குறித்த கலந்துரையாடலில் திணைக்கள தலைவர்கள்,திருக்கேதீஸ்வர ஆலய பிரதம குருக்கள், ஆலய நிர்வாக சபையினர், பொலிஸார், சுகாதார துறையினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.