யேர்மன் தலைநகர் பேர்லினில்மாபெரும் கவனயீர்ப்பு ஒன்றுகூடல்-தமிழர்களே ஒன்று திரள்வீர்!


 73 வருட அடக்குமுறைக்கு உள்ளான மக்களின் ‘நீதியின் எழுச்சி’“ என்ற  தலைப்பின் கீழ்  யேர்மன் தலைநகர் பேர்லினில் முன்னெடுக்கப்படவுள்ள மாபெரும் கவனயீர்ப்பு ஒன்றுகூடலில் கலந்துகொள்ளுமாறு ஈழத்தமிழர் மக்கள் அவை – யேர்மனி மற்றும் தமிழ் இளையோர் அமைப்பு – யேர்மனி ஆகியன இணைந்து அழைப்பு விடுத்துள்ளன.


குறித்த போராட்டம் 04.02.2021 (வியாழக்கிழமை)  மதியம் 12 மணிக்கு (யேர்மன்) Auswärtiges Amt Werderscher Markt 1,10117 Berlin என்ற முகவரியில் நடைபெறவுள்ளது.


“மனிதவுரிமை ஆணைக்குழுவின் 46 ஆவது கூட்டத்தொடரினை முன்னிட்டு தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை யேர்மன் அரசு வலியுறுத்த வேண்டும் எனும் கோரிக்கையோடும்! சிறீலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும் என்ற பரிந்துரைக்கு வலுச்சேர்க்கவும், யேர்மன் வெளிவிவகார அமைச்சுக்கு முன்பாக நடைபெறும் மாபெரும் கவனயீர்ப்பு ஒன்றுகூடலில் அனைவரையும் ஒன்று திரளுமாறு அழைக்கின்றோம்.


நடைபெறவிருக்கும் கூட்டத்தொடரில் சிறீலங்கா தொடர்பாக வரவிருக்கும் தீர்மானத்தின் வரைபில் முக்கிய பங்காற்ற உள்ள யேர்மன் அரசாங்கம் , இன அழிப்பிற்கு உள்ளான மக்களுக்கு பரிகார நீதி கிடைக்க வலியுறுத்த வேண்டும் என்பதை கோரி பெப்ரவரி 4ம் திகதி , சிறீலங்காவின் சுதந்திரநாள் – ஈழத்தமிழர்களின் கரிநாள் அன்று தலைநகரை நோக்கி அணிதிரள்வோம், நீதியின் விழிகள் திறக்கட்டும், தமிழரின் விடியல் பிறக்கட்டும்” என்று ஈழத்தமிழர் மக்கள் அவை – யேர்மனி மற்றும் தமிழ் இளையோர் அமைப்பு – யேர்மனி ஆகியன இணைந்து தமிழ் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளன.


#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.