மட்டக்களப்பில் 5 வயது சிறுமியின் மீது சூடு வைப்பு!


மட்டக்களப்பு ஏறாவூர் மிச்நகரில் 05 வயது சிறுமி ஒருவர், தாயின் இரண்டாவது கணவரால் சூடு வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏறாவூர் மிச்நகர் பாடசாலையில் இவ் ஆண்டு முதலாம் ஆண்டில் கல்விகற்கும் மாணவியே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

சிறுமிக்குச் சூடு வைத்தவருக்கு விளக்கமறியல் மனைவியின் முதல் கணவரது குழந்தைக்கு சூடு வைத்தவரை விளக்கமறியலில் வைத்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

ஏறாவூர் பொலிஸ் பிரிவு மிச்நகர் கிராமத்தில் தனது மனைவியின் முதல் கணவரது 6 வயதான பெண் குழந்தைக்கு சூடு வைத்த குற்றச்சாட்டில் அப்பெண்ணின் 25 வயதான இரண்டாவது கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கரண்டியை சூடேற்றி அந்தச் சிறுமிக்கு முகத்தில் சூடு வைத்த அடையாளங்கள் இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை செவ்வாய்க்கிழமை 09.02.2021 மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தபோது பெப்ரவரி 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாரால் மீட்கப்பட்ட சூடு வைக்கப்பட்டதாகக் கருதப்படும் சிறுமி தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.