கௌதம் கார்த்திக்குடன் ஜோடி சேரும் வாரிசு நடிகை!


தமிழ் சினிமாவில் இளம் கதாநாயகனாக இருக்கும் கௌதம் கார்த்திக்கு ஜோடியாக பிரபல நடிகையின் மகள் நடிக்க இருக்கிறார்.

இதன்படி நட்சத்திர தம்பதிகளான ஜீவிதா, ராஜசேகரின் இளைய மகள் சுவாத்மிகா கௌதம் கார்த்திக்குடன் இணைந்து நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

நந்தா பெரியசாமி இயக்கும் புதிய தமிழ் படத்தில் இயக்குனரும், நடிகருமான சேரனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

நடிகர் கார்த்திக் நடித்த வருஷம் 16 படம் சாயலில் இந்த படம் தயாராக உள்ளது. படப்பிடிப்பை அடுத்த மாதம் தொடங்க திட்டமிட்டுள்ளனர்.கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.