சிறைகளில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிப்பு!


சிறைச்சாலைகளில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி அங்கு இதுவரை 4 ஆயிரத்து 679 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

அதில் வெலிக்கடை சிறைச்சாலையில் 903 பேருக்கும் மஹசீன் சிறைச்சாலையில் 878 பேருக்கும் மஹர சிறைச்சாலையில் 819 பேருக்கும் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அதேவேளை கொழும்பு ரிமாண்ட் சிறையில் 441 பேருக்கும் நீர்கொழும்பு சிறைச்சாலையில் 368 பேருக்கும் இதுவரை தொற்று உறுதியாகியுள்ளது.

இவ்வாறு அடையாளம் காணப்பட்ட நோயாளிகளில் 4 ஆயிரத்து 363 கைதிகளும் 132 சிறைச்சாலை அதிகாரிகளும் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.

தற்போது 150 கைதிகள் மற்றும் 22 அதிகாரிகள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.