பொதுவில் விவாதிக்க வேண்டியவையல்ல உட்கட்சி விவகாரங்கள்!
கட்சியின் உள் விவகாரங்கள் மற்றும் கூட்டணியின் பிரச்சினைகள் பொதுவில் விவாதிக்கப்படக் கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணிக்குள் ஏற்பட்டுள்ள தற்போதைய மோதல்களுக்கு தவறான புரிதல்களே காரணம் என கூறியுள்ளார்.
எந்தவொரு கூட்டணியிலோ அல்லது அமைப்பிலோ பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என குறிப்பிட்ட எஸ்.பி. திசாநாயக்க, இதுபோன்ற பிரச்சினைகளை உட்கட்சிக்குள் விவாதிப்பதே சிறந்தது என்றும் குறிப்பிட்டார்.
அத்தோடு கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் அரசாங்கத்தின் பொதுவான நிலைப்பாட்டை மதிக்க வேண்டும்என்பதோடு இலக்கை அடைய முயற்சிக்க வேண்டும் என்றும் எஸ்.பி. திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை