கொரோனா தொற்றில் இருந்து மேலும் 807 பேர் பூரண குணம்!


இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 807 பேர் பூரணமாக குணமடைந்து இன்று (ஞயாயிற்றுக்கிழமை) வீடுகளுக்குத் திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 63 ஆயிரத்து 401 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் இதுவரையில் தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 68 ஆயிரத்து 576ஆக பதிவாகியுள்ளது.

இதேவேளை கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 351 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.