மத்திய அஞ்சல் பரிவர்த்தனையில் பணியாற்றும் நால்வருக்கு கொரோனா!


கொழும்பு- மத்திய அஞ்சல் பரிவர்த்தனையில் பணியாற்றும் 4 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தொற்று உறுதி செய்யப்பட்ட அனைவரும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அஞ்சல்மா அதிபர் ரஞ்ஜித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

மேலும், கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பினை பேணிய 26பேர், இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் நேற்றைய தினம் (வெள்ளிக்கிழமை) மாத்திரம், 940பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி  செய்யப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.